(இந்த பதிவு கொஞ்சம் நிஜம் , நிறைய கற்பனை )
அறிவியல் வளர்ச்சி சமூகத்தை சீர்படுத்துகிறதா , சீரழிக்கிறதா ..இந்த பட்டிமன்ற தலைப்புதான் இந்த மாத தமிழ்ச் சங்க நிகழ்ச்சி ..அறிவியல் வளர்ச்சி நல்லதா ....கெட்டதா.. என்ற கேள்விக்கு " தெரியலையேப்பா " என நாயகன் ஸ்டைலில் நடுவர் கூறி விடுவாரோ என அஞ்சினேன்...ஆனாலும் சமர்த்தாக ஒரு தீர்ப்பை கூறி அப்ளாஸ் வாங்கி கொண்டார் நடுவர்..."
சுந்தர் பட்டிமன்ற தலைப்பை கூறியவுடன் ,,,, அருமையான தலைப்பு .... இதை தேர்வு செய்தவருக்கு .... என் சபாஷை தெரிய படுத்தவும் என்றேன்...
" பட்டிமன்றத்தில் நீ பேசுறியா" என்றார் சுந்தர்..... நான் மௌனமாய் சிரித்து வைக்க, என் அம்மாவிற்கு பிறகு இந்த பிரபஞ்சத்திலேயே என்னை நன்கு புரிந்து அறிந்த ஒரே ஜீவன் சுந்தர் என்பதால் .. என்னை ரொம்பவும் வற்புறுத்தவில்லை...
மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது .பட்டிமன்றம் பார்க்க .. போலாமா , வேணாமா ... என பெட்டில் புரண்டு படுத்து கொண்டிருந்தேன் .. அவ்ளோ தூரம் போகணும் ,,, வரும் போது ரொம்ப குளுரும்... யோசித்து கொண்டிருக்கும் போதே , தமிழ்ச் சங்க இட்லியும் சாம்பாரும் ஞாபகத்திற்கு வந்தது,.,
எங்க ஆபீஸ் பிரமச்சாரிகளுக்கென ஒரு விடுதி(HOSTEL ) உண்டு .. அந்த விடுதியில் ஒரு மெஸ், அந்த மெஸ்ஸில் சமையல் செய்ய ஒரு நண்பனும் உண்டு.... அந்த நண்பன்தான் கடந்த நான்கு வருடங்களாக இந்த ஷங்கர் என்ற எந்திரத்தை பராமரித்து வருபவர்... அந்த நண்பனிடம் நானும் கடந்த நான்கு வருடங்களாக கேட்டு பார்த்தாகி விட்டது.... எனக்கு பிடித்த மாதிரி முறுகல் தோசையை ஒருநாளும் அவரால் சுட முடிந்ததில்லை .. இதற்கு மேலும் ஒரு கனமான தோசையை சுட முடியுமா ! என்று சவால் விடும் அளவுக்கு சுடுவான்,.,.,.அதை பார்த்தாலே நமக்கு பசிக்காது ... ஆறு மாதங்களுக்கு முன்பு ,ரொம்பவும் வெறுத்துப்போய் அவனை நான் திட்டி விட.... அந்த தோசை விவகாரம் , அலுவலகத்தில் என் மீது "விசாரணை கமிஷன் " வைக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து விட்டது... ஒரு புறாவுக்கு போரா ! என்று நானே என்னை நொந்து கொள்ளும் அளவுக்கு ஆகி விட்டது இந்த தோசை பிரச்சினை !
சரி ... நானே தோசை சுட்டுக்கிறேன்னு என்றாலும் விட மாட்டான் ,,,, அது அவன் ஏரியா-வாம் ...நான் நேரடியாக தோசை சுட்டால் அவனுக்கு கௌரவ குறைச்சல் எனவும் ... கண்டிப்பாக ஒரு நாள் எனக்கு பிடித்த முறுகல் தோசையை சுடுவேன் என்றும் .. அதற்கு கடுமையான முயற்சிகள் எடுக்க போவதாகவும் என்(?) மீது சபதம் செய்தான்...
சரி ஆறு மாதத்திற்கு முன் இந்த தோசைக்கு நான் என்ன செய்தேனாம் ! ஏன் அப்பொழுது இத்தனை பிரச்சினைகள் செய்யவில்லை ! என என்னிடம் விசாரணை கமிஷன் கேட்ட நியாயமான கேள்வியை நீங்களும் கேட்கலாம் ..
இந்த நிலத்திற்கு வந்த புதிதில் , இங்கே என்னுடைய ஆருயிர் தோசையே கிடைக்காது என கேள்வி பட்ட நான் ,,,, மனம் நொறுங்கி ... சிவபெருமானை நோக்கி கடுமையான தவத்தினை மேற்கொண்டேன்...
தெய்வம் மனுஷ ரூபேணா ! என்ற வாசகத்தை கேள்விபட்டிருப்பீர்கள் ... அதாவது ! தோசை மாதிரி வாழ்க்கைக்கு இன்றியமையாத விஷயங்களை வேண்டி , இறைவனை நோக்கி நீங்கள் கடும் தவம் புரியும் போது ! கடவுள் நேரடியாக 100 அடி உயரத்தில் , கதாயுதம் ,வில் அம்போடு வந்து அருள் புரிய மாட்டார்.. அதற்கு மாறாக நம்மில் (அதாவது மனித குலத்தில் ) ஒருவரை அவரது தூதுவராக நமக்கு உதவி புரிய அனுப்புவார்.. அப்படி கடந்த காலங்களில் எனக்கு கடவுள் அனுப்பிய தூதுவர் தான் செந்தில்கணேஷ்..
நான் எப்ப தோசை கேட்டாலும் ...அந்த கருணையே உருவான உள்ளம் இல்லை என்றே சொன்னதே கிடையாது...இந்த மாதிரியான காலகட்டங்களில் .... நான் தோசை சாப்பிட்ட வயிறு நிறைவோடும் ,,, உள்ள பூரிப்போடும் ... " உனக்கு சீக்கிரமா கல்யாணம் நடக்கும் " என என்னையறியாமல் ஆசீர்வாதத்தின் விளைவு,,,, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இல்லறம் எனும் வலையில் சிக்கி கொண்டார் அன்பர் செந்தில்கணேஷ்... அதற்கப்புறம் அவரை பார்ப்பது என்பதே அரிதாகி விட..
அப்படியே பார்த்தாலும் "அது... வந்து .... நான் ... இங்கே ...எங்கே ....அப்புறம் " என மந்திரித்து விட்ட கோழி மாதிரி தான் பேசுவார்,... அதுவும் போக... பிறிதொரு நாளில் அவருக்கு கல்யாணம் ஆக....மொத்தமாக எனது தோசை SOURCE நின்றே போனது.
( சுந்தர் ரொம்பவும் நெருங்கியவர் என்றும் சொல்லும் நீ ! ஏன் அவரிடம் உதவி கோரவில்லை என நீங்கள் கேட்கலாம்! கல்யாணம் ஆன பாவப்பட்ட ஆத்மாக்களின் கஷ்டத்தை நானும் அறிவேன்! ஆகையால் அவர்கள் வீடு வரை சென்று தொந்தரவு செய்வதில்லை ... ஆபீஸ்-க்கு வரும் சமாச்சாரங்களை கபளீரம் செய்வதோடு சரி ! அதுவும் இல்லாமல் ஒருநாள் ! தனக்கு வயிறு சரியில்லை ஆகையால் காலை உணவை(தோசையை) அலுவலகம் எடுத்து செல்கிறேன்,,, என தனது திருமதியிடம் பொய் கூறி ,எனக்கு எடுத்து வந்த நெகிழ்ச்சியான நிகழ்வும் உண்டு... )
இந்த தோசை மேட்டர்-ஐ ரொம்பவும் நொந்து போய் சுந்தரிடம் சொல்லி கொண்டிருந்த போது !" அவர் இதுக்கெல்லாம் ஒரே முடிவு தான் இருக்கு ! அதான் கல்யாணம்" என்று சினிமாவில் வசனம் பேசுவது மாதிரி முகத்தை சீரியஸ்-ஆக வைத்து கொண்டு சொன்னார் ! இருந்தாலும் இதில் ஏதும் உள்குத்து இருக்குமோ என அந்த மாதிரி அபாயகரமான முடிவில் எதுவும் நான் இறங்கவே இல்லை !
அதற்கப்புறம் இந்த விஷயத்திற்கு ஒரே OUTLET தமிழ்ச் சங்கம் தான் என்றாகிவிட , முன்பு எப்பொழு இல்லாத அளவு தமிழ் மீதும் தமிழ்ச்சங்கம் மீதும் எனக்கு பாசமும் பற்றும் பீறிட்டு கொண்டு வந்தது ,,,,
தமிழ்ச் சங்கத்தில் தோசைக்கு உத்திரவாதமோ இல்லையோ , ஆனால் அதன் சகா இட்லிக்கு உத்திரவாதம் உண்டு... இந்த சிந்தனைகள் எல்லாம் எனக்கு மொத்தமாக உத்வேகம் கொடுக்க , பெட்டிலிருந்து குதித்து எழுந்த நான் , ரோபோ ரஜினி வேகத்துக்கு குளித்து ரெடி-ஆனேன் .
பறந்த அடுத்த பத்தாவது நிமிடத்தில் ,தமிழ்ச் சங்கம் ஆஜரானேன் ... சங்க கட்டிடடம் ,,, சிரிப்பில் அதிர்ந்து கொண்டிருந்தது... இயற்கைக்கு முரணாக , ஒரு கட்டிடமே வாய் விட்டு குலுங்க குலுங்க சிரிப்பதை அங்கு கண்டு ஆச்சர்யம் அடைந்தேன் ...யார் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ... என யோசித்து கொண்டே உள்ளே சென்றேன் ... அங்கே ர்வாண்டா தமிழ்ச் சங்க வானில் ஒரு புது நட்சத்திரம் தக தக வென மின்னி கொண்டிருப்பதை கண்டேன்... வேறு யாருமில்லை ,,, என் சக அலுவலக நண்பர் புன்ராஜ்(customer -கள் இப்படிதான் கூப்பிடுவார்கள் ,,, பட் அவர் பொன்ராஜ்) பின்னி பெடலெடுத்து கொண்டிருந்தார் ...எதிர் அணி சத்யா , சாய்ராம், சரவணன் எல்லாம் ரொம்பவே காய்ந்து போய் உட்கார்ந்திருப்பதை பார்க்கும் போதே புரிந்தது .. மனிதன் சூறாவளியாய் கருத்துக்களை சுழன்று அடிக்கிறார் என்று ... ஒரு தேர்ந்தெடுத்த பட்டிமன்ற பேச்சாளர்களை மிஞ்சும் அளவும் இருந்தது அவருடைய நக்கலும் , நையாண்டியும் ... பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தார்கள்...
" நடுவர் அவர்களே , ஆதி கால மனிதன் , இலை தழைகளை ஆடையாக அணிந்தான் ... அறிவியல் நாகரீக வளர்ச்சி இல்லை என்றால் .... எதிர் அணியிரனும் ,பார்வையாளர்களும் .... இலை தழைகளை ஆடையாக அணிந்து வந்து ,இப்படி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்க முடியுமா ! என் கருத்தை பெண்கள் தவறாக எடுத்து கொள்ள கூடாது என பஞ்ச வைத்து முடித்த போது ! அரங்கம் சிரித்து சிலிர்த்தது.. நடுவர் அவர்களே !எதிர் அணி சத்யா பேசும்போது , X -ரே எடுப்பதால் ஆயிசு குறைகிறது என்றார்... X -ரே எடுக்கவில்லை என்றால் ஆயிசே இருக்காதே ! பரவயில்லையா ! அதன் மூலம் தானே நோயிற்கான மருந்தை அளிக்க முடிவு செய்ய முடியும் ! என்று கவுன்ட்டர் அட்டாக் - கொடுத்த போது , அரங்கம் ரசித்து சிரித்தது ."..
இரண்டு தரப்பு வாதங்களையும் நடுவர் விட அதிகமாக நான் தான் உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தேன்.
சமுதாயத்தை சீரழிக்கிறது என்ற அணி பேசிய எந்த கருத்தும் எனக்கு ஒப்ப வில்லை. குறிப்பாக கலாச்சார சீரழிவு என்றார்கள் ... அதில் எனக்கு கடுமையாக ஆட்சேபம் ... கலாச்சாரம் என்ற ஒன்று எங்கே இருக்கிறது அதை சீரழிக்க... கலாச்சார சீரழிவு என்று நீங்கள் குறிப்பிடும் அத்தனை விஷயமும் .இன்று திடீரென தோன்றியதல்ல, அவையெல்லாம் . கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே இருக்கிறது.... அறிவியல் வளர்ச்சி தான் , கலாசார சீரழிவு என்று உங்களால் சொல்லபடுகிற அத்தனையையும் மக்கள் சபையில் ஆதாரத்துடன் நிருபீக்க உதவுகிறது... உதாரணம் ஸ்ரீ ஜல் ஜல் நித்யானந்தம் ... கண்டிப்பாக இந்த விஷயத்தில் நான் Mr .நித்திக்கு என் முழு ஆதரவையும் தருகிறேன்..காரணம் அவர் யாரையும் கட்டாய படுத்தவில்லை..இருந்தாலும் சந்திக்கு வந்த அவர் விஷயம் , அறிவியல் வளர்ச்சியின் கிளு கிளு உதாரணம் . .அப்புறம் இன்னொரு விஷயம் அது என்ன காதலில் நல்ல காதல் ! கள்ள காதல்....ஒன்றுக்கு-ஒன்று என்றால் நல்ல காதல் ! ஒன்றுக்கு-ஒன்றுக்கு மேற்பட்ட என்றால் கள்ள காதல் ! அப்படியா ! என்னவோ உங்க கணக்கு... சரி விஷயத்திற்கு வருவோம் ...
கடைசியாக , இந்திய சீன, பாகிஸ்தான் போர்களை நினைவு கூர்ந்து .... நடுவர் அறிவியல் வளர்ச்சி சமூகத்தை சீர்படுத்துகிறது என்ற தீர்ப்பை வாசித்தார்.. அப்புறம் என்ன சாப்பாடுதான் , என எழுந்தால் , பொதுக்குழு , சந்தா... என ஏகமாக நேரம் இழுத்தது.. .. கடைசியாக ! டின்னெர் டேபிள்-ஐ நெருங்கிய எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.... ஹ்ம்ம் .. நோ இட்லி... ஒரு வழியாக என்ன இருக்கிறது என தேடிய போது ! என்னை கவர்ந்த இரண்டு சமாச்சாரங்கள் " தயிர் சாதமும் , சைவக் குருமாவும் ! "
சைவ குருமாவின் வாசமும் ! தயிர் சாதத்தின் TASTE-ம் ! ஆஹா ஓஹோ ! முதல் , இரண்டு ,என மூன்றாவது ரௌன்டிற்கு டேபிள்-ஐ நெருங்கிய போது ஒரு சிறுவன் என்னை குறு குறு வன பார்த்தது என்னை ஏனோ செய்ய ! சரி இத்தோடு நிறுத்தி கொள்ளலாம் என நினைத்த போது .. வேகமாக வந்த செந்தில் கணேஷ் ! டே! உருளை கிழங்கு வறுவல் எடுத்துக்கோடா ! தயிர் சாதத்திற்கு நல்ல COMBINATION ! என சொல்லி விட்டு செல்ல எத்தனித்தவனை ! லாவகமாக நிறுத்தி!
" ஆமா இங்க இருக்கிற எல்லா சமாசாரத்தையும் விட்டு விட்டு ஏன் நீ ! உருளைக் கிழங்கு வறுவலுக்கு RECOMMEND செய்யுற! என்ன மாயம் என்று வினவினேன்! காதுக்கருகில் அதை நான்தான் செஞ்சேன் என்று கிசுகிசுத்தவன் ! நல்லாயிருக்கா! என்று ஒரு குழந்தை மாதிரி குதுகலித்து கேட்டான்..
அப்பொழுதான் கவனித்தேன் ! அவன் தலையில் புடைத்து இருந்தது .. டே இதென்னடா ஒனிடா பூதம் மாதிரி ! என்றேன்..... அதை ஏன்டா கேட்கிற ! என்று என்னை வெளியில் தனியே தள்ளி கொண்டு வந்தவன்
" ரெண்டு நாள் முன்னாடி சாம்பார் வைக்கும்போது ! IPL மேட்ச் பார்க்குற interest -ல , சாம்பார்ல உப்பை கொஞ்சம் கம்மியா போட்டுட்டேன் ..."
எங்க வீட்டம்மாவுக்கு சாப்பாடு பரிமாறிக்கிட்டு இருக்கும் போது ! அதை அவங்க கண்டுபுடுச்சி கோவத்துல சாம்பார் கரண்டியாலேயே மண்டையில அடிச்சுட்டாங்க! அதான் என்றான் !
என்னடா ஒரு உப்பு கம்மியா போட்டதுக்கே இவ்ளோ பெரிய தண்டைனையா என்றேன் ! ரொம்ப பாவமாக இருந்தது !
அப்பொழுது தான் ! எனக்கு ஞபாகம் வந்தது... நேத்து சுந்தர் வீட்டுக்கு போயிருந்த போது ...அவர் கூட மடித்து கட்டின கைலி ! முண்டா பனியன் , இடது கையில் ஒரு துண்டு , வலது கையில் சாம்பார் கரண்டி , முகத்தில் வியர்வை + கரி என பரிதாபமாக சமையல் கட்டில் இருந்து வெளியே வந்தார்... என்னுடன் ஒரு ஐந்து நிமிடம்தான் பேசியிருப்பார் !
" என்ன குழம்பு ஆயிருச்சா " என தடிமன் ஆன ஒரு அதட்டல் உள் ரூமில் இருந்து வர! இதோ பத்து நிமிஷம் என ஓடியவர் ! கொஞ்சம் நேரம் கழித்து திரும்பி வந்து ! கொஞ்சம் இரு இந்த அப்பளம் மட்டும் பொறிச்சிட்டு வந்திடுறேன் என்றார்..
கல்யாணத்திற்கு அப்புறம் மிகபெரிய மாற்றம் வரும் என்கிறார்கள் அது இதுதானா ! என யோசித்து கொண்டிருக்கும் போது ! என் சிந்தனையை கலைத்த செந்தில் கணேஷ்!
" ஷங்கர் ! நீ பாட்டுக்கு ரொம்ப அசால்ட்டா கல்யாணத்துக்கு அப்புறம் சமைக்க கத்துக்கலாம்னு இருக்காதே ! இப்பவே ஒரு stove வாங்கி ட்ரைனிங் எடுக்க ஆரம்பிச்சுடு ! ஏன்னா நீ என்ன மாதிரி அடி தாங்க மாட்டே! " என்றான் ...
செந்திலின் என் மீதான கரிசனம் புரிந்தது... மனதில் கிலியும் ! அதை தொடர்ந்து வயிற்றில் புளியும் கரைக்க ! முறுகல் தோசையும் கல்யாணமும் என் கண் முன்னே மாறி மாறி பிளாஷ் அடிக்க ...........
கல்யாணம் என்ற ஒன்று அவசியம் தானா ! என் ஆசையான முறுவல் தோசை வெறும் கனவாக போய் விடுமா ! என்ற நீண்ட சிந்தனையுடன் பெருமூச்சோடும் வீடு நோக்கி பயணிக்க ஆரம்பித்திருந்தேன்...


Thambi, unakku koozhukkum aasai, meesaikkum aasai. Kalyanamum pannikkanum, jollyaavum irukkanum! Ithu nadakkara kaariyamaa? Onnu mattum nicchayam.Kalyaanam pannikkitta, murugalaana dosai kidaikkuthaa illaiyo, intha maathiri blogla mokkai podaratha kandippa nirutthiduva!Etho annanukku thonunathai sollipputten! Paatthu soothanamaa nadanthukko!!- Rajagopal, Kampala
ReplyDeletewow shankar, Nice narration... Idle is missing in Dinner!!! Very sad, Very sad!!!.
ReplyDeleteMonth end month end nalla soru potta Tamil sangam valga valga!!!
for your info, Kalyanam ippa panaalum, innum 10 years kalichu pannalum, nadakka vendiyathu ellam nadakkum(Enna ul kuthu mathiri irukka!!???)...
ராஜகோபால் அண்ணனுக்கு , ஹா ஹா ஹா ஹா! கமெண்ட் போட்டதுக்கு ரொம்ப நன்றி ! கல்யாணத்துக்கும் ப்ளோக்க்கும் சம்பந்தம் இல்லைன்னு நினைக்கிறேன் ! அதுவுமில்லாம கல்யாணத்துக்கு அப்புறம் ஏற்படுற மனக்குமுறல்களுக்கு(!!) ப்ளாக் ஒரு நல்ல outlet -ஆ இருக்கும் ! எழுத நிறைய விஷயம் கிடைக்கும் ! ( ஹி! ஹி ! ஹி!)............
ReplyDeleteமச்சி அசோக் ! romba thanks da !நீ சொல்றது என்னவோ வாஸ்தவம் தான் ! பூரி கட்டையில அடி வாங்கனும்னு நம்ம குண்டலியில இருந்தா ! அதை மாற்ற யாரால் முடியும் !
ReplyDeleteHai shankar, u didnt mention about nonveg kuruma and tomato rice that also very nice. any have monthly once we are getting tasty foods so thanks to tamil sangam.
ReplyDeletenice
@Riyaz ,, :) :) :-)
ReplyDeleteRwanda Tamil Sangathula kalanthukkittathu poola erukku.. good narration...
ReplyDelete"Evanga eppavume eppadi thaan boss adippanga...
Adikku payanthavan kalyanam panna mudiyuma...."
"Naanum thosa sappidama evvalavu naal thaan erukurathu"
Ullmanasu eppadi ellam sollum nambidathinga Shankar.... konjam usara erunga...
Nithi
hhhhhhhhhhahahhahah ! Thanks Nithi
ReplyDeleteஹா ஹா ஹா.... ஒவ்வொரு முறை படிக்கும் போதும் சிரிப்பு பீறிடுகிறது.
ReplyDeleteஉட்கார்ந்து கமெண்ட்டை டைப்பக்கூட நேரமில்லாததால் (?) இந்த குயிக் கமெண்ட்.
விரிவான பின்னூட்டம் விரைவில்....
நல்ல வார்த்தைகள் ஓட்டம் படிக்கத் தந்ததற்கு நன்றி ஊர்க்காரரே... சமீபத்தில் அம்முரமேசை சந்திக்கயில் உங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம்...
ReplyDeleteமிக அருமை...
வார்த்தைகளிலடங்கா வாழ்த்துக்கள் நண்பரே!...
@VANMI , அண்ணா , ரொம்ப நன்றி ! ரமேஷ் சொன்னார் ! உங்கள் சந்திப்பு பற்றி !
ReplyDelete\\கொஞ்சம் இரு இந்த அப்பளம் மட்டும் பொறிச்சிட்டு வந்திடுறேன் என்றார்..
ReplyDeleteகல்யாணத்திற்கு அப்புறம் மிகபெரிய மாற்றம் வரும் என்கிறார்கள் அது இதுதானா ! \\
ஹூம்..
கல்யாணத்திற்கு பிறகு வரும் மிகப்பெரிய மாற்றம், இது மட்டும் அல்ல. சோர்ந்து போகையில், தோள் கொடுக்கும் தோழனாய், உடல் நலக்குறைவின் போது ஒரு தாதியாய், நிதி நிலையை நிர்வகிக்க ஆலோசனை தரும் அமைச்சனாய், பெருந்துன்பம் நேர்கையில் மடி தரும் தாயாய் - இப்படி கல்யாணம் தரும் நல்ல விஷயங்கள் ஏராளம் இருந்தும், அதன் பிரச்சனைகள் மட்டுமே பேசப்படுவது சோகமே...!
நீண்ட நாட்களுக்கு முன்பு, நான் பார்த்த ஒரு இந்திப்ப்டத்தின் காமெடி வசனம் இன்னும் நினைவில் இருக்கிறது. பரேஷ் ராவல் என நினைக்கிறேன்.
“போர்க்களத்துக்கும், கல்யாணத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். போர்க்களத்தில், எதிரியுடன் நம்மால் ஒரே படுக்கையில் படுக்க முடியாது”
இந்த வசனத்தை சொல்கையில் ராவலின் முக பாவனையே சிரிப்பை வரவழைத்து விடும். மிக அதிகமாக, நகைச்சுவை எழுத்தாளர்களால் கையாளப்பட்ட விஷயம் கல்யாணம், காதல், மனைவியின் கொடுமை - இவையாகத்தான் இருக்கும் என்பது என் அனுமானம்.
உன்னுடைய இந்த அற்புதமான பத்தியில், நகைச்சுவைக்கு நடுவில் இழையோடும் ஒரு மென்சோகத்தையும் என்னால் உணர முடிகிறது.
விரைவில் திருமணம் நடந்து, நீயும் இந்த இன்ப, துன்பங்களை அனுபவிக்க, மனதார வாழ்த்துகிறேன்.
- சுந்தர்
ஒரு விஷயம் சொல்ல விட்டுப்போய் விட்டது. தமிழ்ச்சங்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இவ்வளவு அருமையாய், வித்தியாசமாக விமர்சனம் செய்து, அது ஒரு விறுவிறுப்பான கதையாக நேர்த்தியுடன் வந்ததை பாராட்டியே ஆக வேண்டும்.
ReplyDeleteநிறைய எதிர்பார்க்கிறோம்.
-சுந்தர்
thanks sundar ................
ReplyDeleteநிகழ்ந்தவைகளை படிக்கத்தூண்டும் வகையில் எழுதுவது சிலபேருக்கு மட்டுமே கைவந்த கலை.அந்த திறமை உன்னிடமும் இருக்கிறது..செந்தமிழும் நா பழக்கம் மட்டுமல்ல எழுத எழுத கைபழக்கம் என்பதை உனது எழுத்துக்களை பார்க்கும்போது தெரிகிறது..தொடர்ந்து எழுது ஆனால் மற்றவர்கள் மனது புண்படாதவாறு எழுத்து..ருவாண்டா தமிழ் சங்கத்தில் நடந்ததை நேரில் பார்த்த மாதிரி இருந்தது..
ReplyDeleteவாழ்த்துக்கள்
-ரெங்கராஜன் .கோ
Romba Thanks Rengs, அப்படியே செய்கிறேன்
ReplyDeleteஷங்கர் அண்ணே,
ReplyDeleteவாழ்த்துக்கள் அருமையான படைப்பு. கலக்கிடீங்க மேலும் மேலும் இந்த மாதிரி முறுகல தோசை பண்ண என்னுடைய வாழ்துக்கள்.