எழுதப்பட்ட தேதி : 25 ஆகஸ்ட் 2010
இந்த பிரபஞ்சத்தின் கெட்டு போகாத ஒரே விஷயம் தேன் என என் நண்பன் சொன்னான் ...... ஆனால் காதலும் கூட ..... காதலர்கள் தான் கெட்டுப் போகிறார்களே தவிர காதல் இல்லை..... நாத்திகம் பேசுபவர்களையும் காதலை வெறுப்பவர்களையும் ஒரே தராசில் வைக்கலாம் .... ஏனெனில் இருவருமே நம்பிக்கையை இழந்தவர்கள்...... காதல் , காமத்திற்கான திறவுகோல் எனவும் , அதனை அடைந்தவுடன் காதல் மறைந்துவிடும் ...எனவும் நானே பலமுறை வியக்ஞ்யம் பேசியிருக்கிறேன்... காதலை காமத்தையும் ஒப்பிடுவதையே இப்பொழுது நான் வன்மையாக கண்டிக்கிறேன்....இங்கே நல்ல காதல் கிடைக்க பெற்ற அனைவருமே புண்ணியவான்கள்....சமீபத்தில், ஆனந்த விகடனில் , மதனின் காதல் காமம் பற்றிய அருமையான பதில் படித்தேன் ...உண்மையான காதலர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்... கடவுளை எப்படி உணர மட்டுமே முடியுமே அப்படியே காதலும்......அது ஒரு அலாதி இன்பம்... ஒரே நேரத்தில் அதிகப் பட்ச உற்சாகமும், அதிகப் பட்ச சோர்வும்...கிடைக்கப் பெறுவது காதலில் மட்டுமே...நீங்கள் சரியான எண்ணத்தில் பயணித்தால் காதலும் உங்களுடன் சரியாகவே பயணிக்கும்....
எனக்கு லவ் அனுபவெல்லாம் கிடையாது என பெருமையாக நீங்கள் சொல்லிக் கொள்பவரா...உண்மையில் நீங்கள் unlucky தான்... இந்த பிரபஞ்சபத்தின் அமைப்பு எந்த அளவுக்கு ஆச்சர்யமோ ! அதை விட பல மடங்கு ஆர்ச்சயம் இந்த காதல்... இது ஒரு மாயக் கப்பல்.. நல்ல சிந்தனையில் இயங்கினால் மட்டுமே கரை சேர வாய்ப்பு... உண்மையான காதலுக்கு காமம் ஒரு பொருட்டே அல்ல.... அது அதையும் தாண்டி பல காலம் பயணிக்கும்.....
காமம் புளித்து போக கூடியது.... காதல் என்றும் அதே இளமையுடன் இனித்து கொண்டிருப்பது.....பார்த்தவுடன் காதலில் நம்பிக்கையில்லை.....
புரிதலில் தான் இருக்கிறது உண்மையான காதல்.... அழகிய தீயே படத்தில் வருமே " ஜஸ்ட் பூம் " அந்த மாதிரி....
காதலில் எதச்சையாக காமம் கலந்துவிட்டால் தப்பில்லை ... ஆனால் காதலின் நோக்கமே காமம் என்றால்... உங்களுக்கு கிருமி போஜனம் தான்....
அதுவுமில்லாமல் உங்கள் உடல் பசிக்கு தயவு செய்து காதல் என்ற போர்வை போத்தாதீர்கள்...
காதலுக்கு பசி தூக்கம் என எதுவும் உணரத் தெரியாது ... அது ஒரு மாதிரியான மாதிரி..... உருவக படுத்தவே முடியாத ஒரு விஷயம் .....
ரொம்ப தூரத்தில் தெரியும் ஒரு பொருளை , ஒருவர் உங்களுக்கு காண்பிக்கும் போது , எங்க , எங்க என பலமுறை கேட்டு , ரொம்ப உன்னித்து பார்த்து
கடைசியில் தெரிந்தவுடன் அட! ஆமாம்! என ஆச்சர்யத்தில் வாய் பிளப்போமே ..... அப்படித்தான் ... காதலும் .... புரிந்து கொள்ளும் வரை தெரிந்து கொள்ளும் வரை ... அது ஒரு மாயை ,,, அதாவது இல்லை...
நாம் நம் சொந்த உணர்வால் புரிந்து கொள்ளும் வரை .... இங்கே எல்லாம் இல்லை தான்...
ஆதலினால் காதல் செய்வீர்...

No comments:
Post a Comment