எழுதப்பட்ட தேதி : 15 ஆகஸ்ட் 2010
"மறந்த்த்துட்ட்டியா" என்ற கதாநாயகியின் ஒற்றை வரியில் சூடு பிடிக்க தொடங்குகிறது படம்...
காதலுக்கு மொழி இல்லை ..... அது உணர்வுகளை மூலமே பேசி கொள்கிறது.... காதலின் ஆரம்பமும் சரி.... முடிவும் சரி ..... சரி வர புடிபடுவதேயில்லை..... எப்போ வந்திருக்கும் என பல மணி ஆராய்ந்தாலும் .... அந்த பூம் என்ற நொடியை கண்டறிவது முடியாது ....
12 வருடத்திற்கு ஒரு முறை பூக்குமாம் அத்திப்பூ... அப்படித்தானோ டைரக்டர் விஜய் .... இத்தனை நாள் எங்கிருந்தார் இந்த மனுஷன் ..... என்று நினைக்க தோன்றுகிறது.... கிரீடம் படத்தில் தனக்கென ஒரு ஸ்டைலை கொண்டு வந்த மனிதர் .... இந்த படத்தில் பட்டய கிளப்பி விட்டார்...
தமிழ் டைட்டானிக் என்று சர்வ சாதரணமாக கமெண்ட் செய்கின்ற அனைவருக்கும் ஒரு கொட்டு... உள்ள லவ் ஸ்டோரி-எ பார்க்க முடியல ..... இதுல 1947 -ஆம் என சலித்து கொண்டே போனால்....முதல் frame-ல் இருந்து கடைசி frame வரை கண்ணை எடுக்கவே முடியவில்லை.... சினிமா என்ற பெயரில் ஒரு இரண்டரை மணி நேர கவிதை....மதராசபட்டிணம்....
கதையின் மிகபெரிய பலம் .... கதாநாயகியின் வயதான தோற்றத்தில் நடித்திருப்பவரும் .... டயலாக் இல்லாமல் வெறும் கண்களாலே நடித்திருக்கிறார் ......பார்வையில் பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார்...
அடுத்து எமி ஜாக்சன் .... கதையின் நாயகி ...... முதல் படம் ... அதுவும் வேற்று மொழி படம் ....... யப்பா ! நம்பவே முடியலை .... படத்தின் மையப்புள்ளி என்பதை உணர்ந்து ..... மிகுந்த சிரத்தையுடன் ....
அடுத்து கலை இயக்குனர் செல்வகுமார் ,,,,, இன்னும் எத்தனை திறமைசாலிகளை தமிழகம் சுமந்து கொண்டுருக்கிறதோ.....
எல்லாவற்றிற்கும் மேலாக நம்ம சின்ன இசைப்புயலின் இசையும் , பின்னணியும் ,,,,,, " தான தோம் தனன , தான தோம் தனன.." பூக்கள் பூக்கும் தருணம் "... ஒரு பாடலே போதும் .......
தமிழ் சினிமா -வின் கிரீடத்தில் அடுத்து ஒரு வைரக்கல் ....... விஜய்.... தமிழ் சினிமா ரசிகர்கள் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் ...
பொய்மை ,புரட்டு , கயமை .... துரோகம் ..... ... என கலியுக குப்பைத் தொட்டி நிரம்பி வழிகின்ற போதிலும்..... பூகோளம் ......இன்னும் சுழன்று கொண்டு இருப்பதன் காரணம் ..... உண்மை , நேர்மை , எதிர்பார்பில்லா அன்பு , இவை எல்லாம் இன்னும் ஏதோ ஒரு மூலையில் மௌனமாய் ஊர்ந்து கொண்டிருப்பதால்தான்...
அப்படித்தான் தமிழ் சினிமாவும் ,, பஞ்ச் டயலாக், item டான்ஸ் , six pack fever , என நலிந்து கொண்டிருந்தாலும் , அவ்வபோது கம்பீரமாய் உலக சினிமாவில் உட்கார காரணம் .... விஜய் மாதிரி ஆபத்பாந்தவ இயக்குனர்கள் ..மதராசபட்டிணம் மாதிரி சினிமா கவிதையை அவ்வப்போது தெளித்து விட்டு செல்வதால்தான்...
மதராசபட்டிணம் ----- புதுகவிதையான மரபுக் கவிதை ................ ஸ்கோரிங் 98 மார்க்ஸ் ............. டோன்ட் மிஸ் இட்...

No comments:
Post a Comment