எழுதப்பட்ட தேதி : 8 ஜூன் 2009
நாயகன் (LIC Agent) : இந்தா இந்த FORM-ல ரெண்டு கையெழுத்து போடு...
நாயகி : ஏன் ?
நாயகன்: எப்படியும் இவிங்க ரெண்டு பேரும் நம்மள சேரவே விட மாட்டேங்க்ய , உன்கூட பழகனத்துக்கு ஒரு 2 லட்சத்துக்கு பாலிசி யாவது போடு....
------------------------------
மசாலா சினிமாக்களின் அடிமையாக இருந்த என்னை அழ வைத்த முதல் படம் LIFE IS BEAUTIFUL , அதற்கடுத்து என்னை பிரமை
பிடிக்க வைத்த படம் " பசங்க".............
படத்தலைப்பையும் opening scene-களையும் வைத்து படத்தை குறைத்து மதிப்பிட்டு விட்டேன்.
கண்டிப்பாக இது அடுத்த சினிமா தலைமுறைக்கான படம்..
நல்ல பாடமும் கூட.
அட ! நாம்தாம் இது என பார்க்கும் ஒவ்வொருவரையும் நினைக்கவைக்கும் படம் .
நம்மை போல சிந்திக்க கூடியவர்கள் , ஒரே அலைவரிசையில் உள்ளவர்கள் நம் அருகில் இருந்தால் சிறந்த நண்பர்கள் ஆகிறார்கள்.
அதுவே எங்கோ இருக்கும்போது நமக்கு பிடித்த நாயகர்கள் ஆகிறார்கள்; அந்த வகையில் இயக்குனர் பண்டிராஜ் என்னுடைய நாயகன்;
சுப்ரமணியபுரம் , வெண்ணிலா கபடி குழு என நல்ல படங்கள் வந்தாலும் அதன் கதைக் களத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால் இந்த அளவிற்கான தாக்கத்திற்கு நான் ஆட்படவில்லை. துவக்கத்தில் அதிகபிரசங்கிதனம் , நடுவில் அந்த பையனுக்காக குடும்பமே ஓட்டப் பந்தயந்த்தில் கூட ஓடுவது, முடிவில் கைதட்டி உயிர் பிழைப்பது போன்ற கடுப்பேத்தும் விசயங்களை தவிர்த்து பார்த்தால் படம் கவிதை ....
சினிமாக்களை போரடிக்கும்போது மட்டும் பார்த்த எனக்கு ,TOM HANKS நடித்த ,steven spielberg இயக்கியடெர்மினல் பார்த்த பிறகு , சினிமா நல்ல நண்பன் ஆனது. இன்றளவும் எங்கள் மத்தியில் TOM HANKS அந்த படத்தில் பேசும் ENGLISH ரொம்ப பிரபலம் .... கிட்ட தட்ட 25 தடவையாவது பார்த்திருப்போம் ....
என்னுடைய 12 வயதில் என்னை கடந்து சென்ற என் முதல் உயிர் நண்பன் ரமேஷ் பாபு , அதுவரை நட்போ அதன் வாசமோ அறிந்திராத எனக்கு நட்பென்றால் இப்படிதான் இருக்கும் என என் மீது அக்கறை காட்டிய அந்த 12 வயது சிறுவன் .... உள்ளார்ந்த பாசத்தோடு என்னிடம் பழகிய முதல் ஜீவன் .
சொந்த அண்ணனால் கூட சில காரணங்களால் தவிர்த்தும் ஒதுக்கவும் பட்ட என்னை , எந்தவித எதிர்பார்ப்பின்றி பிரதிபலனின்றி ஏற்று கொண்ட நண்பன் ...
ஏழாம் வகுப்பு முடிந்தவுடன் , அப்பாவுக்கு விருத்தாசலம் மாற்றலாக , திரும்பி வருவேன் என பொய் சொன்ன அரிச்சந்திரன் ...
என 26 வருடத்தை 2 1/2 மணி நேரத்தில் திரும்பி பார்த்த உணர்வு.........பசங்க படம்.........
வாழ்க்கை மிக அழகானது .... காதலும் கூட ...
வாழ்க்கை மிக எதார்த்தமானது .... காதலும் கூட... இந்த படத்தில் அது அருமையாய் சொல்லப்பட்டுள்ளது ...
அதுவும் ரொம்ப POSITIVE பொண்ணாக வரும் ஷோபிக்கன்னு ,எந்த ஒரு விசயத்தையும் ரொம்ப CASUAL - ஆக எடுத்து கொள்ளும் சித்தப்பா கேரக்டர் ... என எல்லா கேரக்டர்-களும் செதுக்க பட்டுள்ளன .
என் நண்பர்கள் அதிக பட்சம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் .. காதலித்து கொண்டிருப்பவர்கள் .. போனவாரம் சென்னையில் ஒரு ROMEO காதலுக்காக தீக்குளித்து புரட்சி செய்தார் ... இதை விமர்சித்த என்னை காதலிச்சு பார்த்த உனக்கு வலி தெரியும் என ஒரு நண்பர் சாட்டிங் - ல் சண்டைக்கு வந்தார்..
காதல் என்ற உயர்வான விஷயத்தை கடக்காமலே வந்து விட்ட நான் துரதிர்ஷ்டசாலிதான் .. ஆனால் அந்த காதல் என்ற களத்தில் இறங்காதவர்கள் அதை பற்றி பேசவே கூடாது என்பதும் , காதலித்து திருமணம் செய்த அல்லது செய்து கொண்டிருக்கிரவேனேல்லாம் ஏதோ பெரிய புடிங்கி மாதிரி பேசுவதும் ..............
அப்படி என்ன லட்சணத்தில் இவர்கள் காதல் செய்கிறார்கள் ...எல்லாருக்கும் காதலை பற்றி ஒரு விளக்கம் இருக்கும் , உனக்காக நான் , எனக்காக நீ .. என இருப்பது தான் புனிதமான காதல் ... நட்பும் காமமும் இதன் கலவைதான் காதல் ... ரொம்ப புனிதமானதும் கூட... இவர்கள் புனிதம் எல்லாம் காதலித்து கட்டிய மனைவி ஊருக்கு போகும் வரை தான் ... காதலி தொலை தூரத்தில் இருக்கிறாள் என துரோகம் செய்வதும் ..........இதையே ஒரு பெண் செய்தால் குய்யோ முய்யோ என அடித்து கொள்வது , இதற்க்கு Male chauvinismஎன்ற கேவலமான விளக்கம் வேறு... பசி என்றால் எல்லாருக்கும் ஒன்னும்தான் ... உனக்கு மட்டும் தாங்க முடியாது ... கருப்பியோ வெள்ளையோ ஏதோ வேணும் ... ஆனா காதலித்த மனைவி மட்டும் குனிந்த தலை குனிந்தபடியே இருக்கணும் ... இந்த கருமத்துக்கு காதல் திருமணம் , சம உரிமைன்னு வீண் விளம்பரம் வேற... இவனுங்க காதல்ல ... சரி அதை விடுங்க இன்னொரு மெயில்-ல பார்த்துக்கலாம் . நம்ம " பசங்க " matterukku வருவோம்
இவர்களுக்கு மத்தியில் சில உண்மையான காதலர்களால் தான் இன்னமும் காதல் உள்ளது .......................
இந்த கால செல் காதலை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.படத்தில் காதல் சொல்லப்பட்ட விதம் ரொம்ப எதார்த்தம் ..
இந்த படத்தில் எல்லாரும் ரொம்ப நல்லவர்கள்களாக காட்டபட்டிருப்பது சூப்பர்.. கடைசியில் எல்லா படத்தை போலவே touching கிளைமாக்ஸ் தான் என எதிர்பார்க்கும் நமக்கு ,, படம் POSITIVE -ஆக முடிவது சந்தோசமாயிருக்கிறது .இல்லையென்றால் தமிழ் சினிமா இலக்கண படி இந்த மாதிரி படங்களில் யாரவது செத்தே ஆக வேண்டும் . அந்த கேனத்தனமான செண்டிமெண்ட் தவிர்க்க பட்டருக்கிறது சின்ன பசங்களை ரொம்ப கஷ்டப்பட்டு வேலை வாங்கியிருக்கிறார் .. சோபிக்கன்னுவை போனில் ஓட்டுவதும் அதற்க்கு அவருடைய reaction-ம ரொம்ப கவிதை..
இயல்பாக வாழ்ந்திருக்கிறார்கள் அனைவரும் அவரவர் கதாபத்திரத்தில்
"பசங்க " சேகரித்து வைத்து கொள்ள வேண்டிய பொக்கிஷம் ....

No comments:
Post a Comment