Thursday, 5 May 2011

நா.............ன்......... நா........ன்................. நானே................தான் ............... எழுதினேன்.........

                                                                                         எழுதப்பட்ட தேதி : 29 ஆகஸ்ட்  2010   





கடந்த "ஆதலினால் காதல் செய்வீர்கள் "  மின்னஞ்சலுக்கு , இரெண்டே வகையான reply --தான் வந்திருந்தது ..... ஒன்று யாரந்த பெண் ?  அடுத்த கேள்வி..திருவிளையாடல் படத்தில் தருமிக்கு கேட்கப்பட்ட கேள்வி ..... இதை யார் எழுதியது....

இந்த இரண்டு கேள்விக்கும் ..... ஒரே பதில் வேண்டுமானால் , தசவதாரம்  பட ஸ்டைல்-ல் குறைந்த பட்சம் ஒரு பத்து வருடமாவது  பின்னோக்கி செல்ல வேண்டும்...அதாவது சுஜாதாவும் ... HITECH கதைகளும் ..... எனக்கும் அறிமுகமில்லாத காலம் ... படித்து மகிழ பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் கிடைக்காவிட்டாலும்... உள்ளூர் எழுத்தாளர்களின்  பதிப்புகளை தேடி படித்த காலம்...

நான் டிப்ளோமா முடித்த விடுமுறை.... எனக்கு எழுத்துலகின் மீது தீராத காதலும்....மோகமும் படர ஆரம்பித்த சமயம்...புத்தகங்களை தேடி படிக்க ஆரம்பித்திருந்தேன்....அதையும் தாண்டி என் கட்டுக்கு அடங்காமல் பயணித்து கொண்டிருந்த என் கற்பனை குதிரையை என்ன செய்வது என்று தெரியாமல் ... ஒரே வழி ... எழுதி தொலைப்பது .... என யூகித்து இருந்த வேளையில் .... பிறந்த முதல் கதை...... ரோபோ ....... அதாவது ..... என் எண்ணம் , விசித்திரமான சிந்தனைகளை  எப்போதும் அசை போட்டபடியே இருக்கும் .....இப்படியான சிந்தனைகளை எழுதுவதன் மூலமே , அதன் இம்சையிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும்...

2000 மத்தியில் , அதாவது ஜூன் மாதத்தில்,.... தொடர்ந்து ஒரு வாரம் .... 100   பக்கத்திற்கு மேல் எழுதப்பட்ட ஒரு குழந்தை தனமான கதை ரோபோ .....

கதையின் அவுட்  லைன் இதுதான்  ...கதை ஜனவரி 20   2097 -ல்  ஆரம்பிக்கும் ...  அடுத்து வரும் அதிபர் தேர்தலில் மீண்டும் தானே ஆட்சி க்கு வர , எதாவது ஒரு திட்டத்தை அறிவித்து .. மக்களை கவர , நமது நாட்டின் அதிபர் திட்டமிடுவார் .. அன்றைய தினத்தில் ரோபோ க்களை வீட்டு வேலைக்கு வைத்து கொள்வது ... சாதாரண மக்களுக்கு ஒரு எட்டா கனியாக இருக்கும்...

ஆக  .. அரசாங்கமே அனைவருக்கும இலவசமாக  ரோபோ என்ற திட்டத்தை அறிவித்து .... அதன் மூலம் மக்களின் ஆதரவை பெறுவது ...இதற்கான ,,, முயற்சியில் இறங்கச் சொல்லி , அதிபர் விஞ்ஞானிகள்  குழுவுக்கு உத்திரவிட்டிருப்பார்... அதாவது ஜன 26 அந்த திட்டத்தை அறிவித்து .... ஆக் 15 -ல் நடைமுறைக்கு கொண்டு வருவது ... அதனை தொடர்ந்து மக்களின் ஆதரவை பெற்று ... அடுத்த தேர்தலிலும் ஆட்சியை பிடிப்பது ....

கதை படி டெல்லியில்  ஒரு ஹீரோ ...  ..  டெல்லி ஹீரோ லவ்வி கொண்டிருக்கும் ஒரு துணை scientist ....அந்த திட்ட குழுவின் , ஒரு சாதாரண உதவி விஞ்ஞானி  .. டெல்லி நாயகனின் காதலி ... துணை தலைமை விஞ்ஞானியின் மகள்.... ..
சென்னை யில் ஒரு ஹீரோ ....  கல்யாணமானவர் ..அரசாங்க வேலை பார்க்கும் பக்கா குடும்பஸ்தன்...அந்த திட்டத்தின் பயனை  அடைய போகும் ஒரு நடுத்தர குடிமகன் ,,,

கதை ..... டெல்லி அதிபர் மாளிகை மீட்டிங்-ல் இருந்து ஆரம்பிக்கும்.... அதிபர் , தலைமை விஞ்ஞானி, துணை தலைமை விஞ்ஞானி... கதையின் நாயகன் ,,, நாயகி ... இவர்களை வர்ணித்து , பிறகு களத்தில் இறங்கும்....

திட்டமிட்டபடியே , ஜன 26 -ல் அறிவிக்கப்பட்ட திட்டம் ....  ஆக் 15 -ல் செயல்படுத்த படும்போது ..... நாடு ... மிகப்பெரிய  அதிர்ச்சியை சந்திக்கும்....  அதாவது .... பாமரனுக்கும் ரோபோ , என அறிவித்து ... அதனை வழங்கி.... ஆக் 15 ஒரே நேரத்தில் அதிபர் கையால் இயக்கி வைப்பதாக பிளான்....ஆனால் அப்படி இயக்கும் போது
  அதே ரோபோ க்களே ..... நாடு சுதந்திரம் அடைந்த அதே ஆக் 15 -ல் நாட்டை சிறை பிடிக்கும்.... பின்னணியை ஆராயும்போது .... தீவிரவாதிகள் , கத்தியின்றி ... ரத்தமின்றி ... கொஞ்சம் மூளையை பயன்படுத்தி ,  நம் திட்டத்தை வைத்தே நம்மை மடக்கியிருப்பர்கள்.....

இப்பொழுது நாட்டை காப்பாற்றவது  எப்பொழுதும்  போல ...விஞ்ஞானி  நாயகனின் பொறுப்பு ... அவனுக்கு உதவுவது நாயகியின் கடமை...சம்பந்தமில்லாமல் தீவிரவாதிகளிடம் மாட்டி கொண்ட, தன்  குழந்தையை காப்பாற்ற சென்னை நாயகனும் களத்தில் இறங்க ..இவர்கள் இருவரும் இணைந்து எப்படி .... தீவிவாதிகளை அதே பாணியில் தந்திரமாக வீழ்த்துகிறார்கள் .... என 100 பக்கத்துக்கு  நீட்டி முழக்கியிருப்பேன்.. கடைசியில் நாயகியின் அப்பாதான் எல்லாவற்றிற்கும் காரணம் என கண்டுபிடித்து .... நாட்டை காப்பாற்றி .... அதிபர் கையால் மெடல் வாங்கி ...விஞ்ஞானி அந்தஸ்தை பெற்று ... நாயகியை கைபிடிப்பார்...

எழுதி முடித்தாயிற்று .... யாரவது படிக்க வேண்டுமே.... இருக்கவே இருக்கிறார் நம் முதல் பரம விசிறி .... அம்மா..
புத்தகங்களும் , கதைகளும்  அம்மாவுக்கும் ரொம்ப விருப்பம் தான் ... முழுவதையும்  படித்தவர் .... நன்றாக இருப்பதாக பாராட்டினார்....
ஆனால் நான் அந்த கதையில் டெல்லி நாயகியை .... அரேபிய குதிரை மாதிரி உடல் வாகு ... கோதுமை நிறம் ... என ஏகத்துக்கும் வர்ணித்திருந்தது .... அம்மாவுக்கு ஏதோ உரைத்திருக்க வேண்டும்... ஏம்பா வேலை கிடைக்கிறவரைக்கும் பெரியப்பா கடையில பட்டன் கட்டலாம்ல என்றார்... அம்மா முகம் பார்த்தேன் ... ஏதோ சொல்ல வருகிறார் என்று புரிந்தது... நோட்டும் புத்தகங்களும் மூட்டை கட்டபட்டன... அத்தோடு என் எழுத்தார்வமும் ....

ஏன் இவ்ளோ பெரிய விளக்கம் என்று நீங்கள் யோசிக்கலாம் .... இப்போ, எனக்கு வந்த ரெண்டு கேள்விக்கும் பதில் ...
எனக்குள் எழுதும் விருப்பம் , கடந்த 10 வருடமாக ஒரு அட்டையை போல் ஒட்டி கொண்டுள்ளது என்பதும் .. ஒன்றை பற்றி எழுத கொஞ்சம் கற்பனை போதும்..என்பதும்.....

"மதராசபட்டினம்" மெயில் எங்கோ பார்த்த ஒரு சினிமாவை பற்றிய விமர்சனம்...
"ஆதலினால் காதல் செய்வீர்" எங்கோ கேட்ட காதலை பற்றிய அபிப்ராயம்... எனக்கு காதலும் அதன் அனுபவமும் அமையாமல் போனது துரதிர்ஷ்டம்தான் என்றாலும்....கண்டிப்பாக என் எதிர்கால மனைவியை கண்மூடித்தனமாக காதலிப்பேன் எனவும்.... அப்பொழுது அந்த ரியல் காதல் அனுபவத்தை இன்னும் விரிவாக சுவராஸ்யமாக எழுதுவேன் என்றும்  கூறி கொள்கிறேன்....என் நண்பர்களுக்கு திருமணத்திற்கு முன்  காதல் ... எனக்கு அப்புறம் அவ்வளவுதான்...

இதை எழுதியது யார் என்ற நக்கீர(நக்கல்) கேள்விக்கு ..... அதே திருவிளையாடல் தருமியின்  பதில் தான்.,....

நா.............ன்..............   நா........ன்................. நானே....................தான் ...............  எழுதினேன்.........

1 comment:

  1. பின்னூட்டம் இட்ட தேதி : 17-08-2010

    ஹூர்ரே..... ஹூ ஹூ ஹூ... யாஹ்ஹூ....

    என்ன? ஒன்றும் புரியவில்லையா? நீ....ண்......ட நாள் கழித்து ஒரு அற்புதமான பத்தி எழுத்தை வாசிக்க நேர்ந்ததில், என்னிடம் இருந்து வெளிப்பட்ட உற்சாகக் கூச்சல் தான் மேலே காண்பது.

    சங்கர் இதுவரை எழுதிய அனைத்திலும் ஆகச்சிறந்தது இதுவென்பது என் எண்ணம்.

    சுஜாதா பற்றிய சங்கரின் பார்வை தான் முதலில் நான் வாசிக்க வாய்த்தது. அது அவ்வளவாக கவரவில்லை என்றாலும், அந்த எள்ளலான நடையும், மேம்போக்கான வார்த்தை ஜாலங்களும் பிடித்துப் போயின.

    அப்போதிருந்து பல தருணங்களில் சங்கரின் எழுத்துக்களை படித்து வந்திருக்கிறேன். “களவாணி - விமர்சனம்”, “மதராசபட்டினம் - ஒரு பார்வை” ”ஆதலினால் காதல் செய்வீர்” இவை தவிர்த்து அவ்வப்போது மின்னஞ்சலில், சில நிகழ்வுகளின் எதிர்வினையாக, கொதித்தெழுந்து சங்கர் எழுதி அனுப்பிய அனைத்தையும், மௌனமாக வாசித்து விட்டு கடந்து போயிருக்கிறேன்.

    ஆனால் இப்போது அப்படி கடந்து போக முடியவில்லை. ”பழகப் பழக பாலும் புளிக்கும்”... சட்... மன்னிக்கவும்.. “எழுத எழுத எழுத்து மேம்படும்” என்ற வாத்தியார் (சுஜாதா) கூற்று இங்கே இன்னொரு முறை உண்மையாகி இருக்கிறது.

    //படித்து மகிழ பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் கிடைக்காவிட்டாலும்... உள்ளூர் எழுத்தாளர்களின் பதிப்புகளை தேடி படித்த காலம்//

    சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் (உங்க ஊர் ஆளு தானே, வர்ணனைல கலக்குவார்), ராஜேஷ்குமார் - உள்ளூர் என்றது இவர்களையா? அல்லது விருந்து, காமக்களியாட்டம், மன்மதன் - இந்தப் பதிப்புகளா? :)

    // என் எண்ணம் , விசித்திரமான சிந்தனைகளை எப்போதும் அசை போட்டபடியே இருக்கும் //

    அதுதான் தெரிந்த விஷயமாயிற்றே...

    //எழுதுவதன் மூலமே , அதன் இம்சையிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும்//

    ஹும்.. தப்பிக்கவா முடியும்?

    //டெல்லி நாயகியை .... அரேபிய குதிரை மாதிரி உடல் வாகு ... கோதுமை நிறம் ... என ஏகத்துக்கும் வர்ணித்திருந்தது//

    அப்பவேவா? :-)

    ஒன்றை இங்கே சொல்லியே ஆக வேண்டும். “ரோபோ” என்ற தலைப்பில் சங்கர் எழுதிய கதையை நான் படித்ததில்லை. ஆனால், அதன் சாராம்சம் - அட்டகாசம். அன்றைக்கு (பத்து வருடம் முன்பு) சுவாரஸ்யமாக இருந்திருக்குமோ, இல்லையோ தெரியாது, ஆனால் அதன் முடிச்சை (நாட்டுப்பா...:) ) இன்னும் நினைவில் வைத்திருந்து இப்போது எழுதியிருக்கும் விதம் அருமை.

    எந்திரன் கதையை விட இது நன்றாக இருக்கிறது. வஞ்சப்புகழ்ச்சியாக சொல்லவில்லை. உண்மை. அதை நீங்களும் உணர்ந்திருக்கக்கூடும். அந்த வயதில் இவ்வளவு தூரம் தர்க்கரீதியாகவும் (லாஜிக்), திருப்பங்களுடனும், ஒரு திரைக்கதைக்கு இணையாக யோசிக்க முடியும் என்றால், இப்போது?

    பட்டுக்கோட்டையில் இருந்து வருபவர்களுக்கெல்லாம், சுவாரஸ்யமான எழுத்து நடையும், மிகச்சிறந்த கற்பனை வளமும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது போலும்.

    //ஏம்பா வேலை கிடைக்கிறவரைக்கும் பெரியப்பா கடையில பட்டன் கட்டலாம்ல என்றார்.//

    நல்லவேளையாக சங்கர் இதை செயல்படுத்தி விடவில்லை. :-)

    எங்கள் விருப்பம் எல்லாம் சங்கரின் எழுத்துப்பயணம் தொடர வேண்டும், இன்னும் பல படைப்புகள் சங்கரின் விரல் மற்றும் விசைப்பலகை வழியாக உருவாகி வர வேண்டும். பத்தி எழுத்து மட்டுமன்றி, வேறு முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். By the way, I have liked Shankar's short poems (are they haikoos?) that are displayed in his Google Talk.

    வாழ்த்துகள் சங்கர்.


    மிக்க அன்புடன்,

    சுந்தர்

    ReplyDelete