நாம் நம் கனவை நோக்கி ஒரு அடி நகர்ந்தால் , அது நம்மை நோக்கி 100 அடி நகரும்... எங்கோ படித்தது.....
தன்னை விட எடை நிறைந்த உணவை தூக்கி செல்லும் எறும்பிற்கு , அந்தச் சுமை ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை ..... அந்த மாதிரி தான் கனவை சுமக்கும் ஒவ்வொரு மனிதனும் ............ஒரு வகையில் நாமும் எறும்பு மாதிரி தான்,,,,, பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் ,, நமக்கான கனவை சுமந்து திரிந்து கொண்டிருக்கிறோம்....
------------------------------
-"டேய்ய்ய்ய் சங்ககருருரு"..................
யார் என யோசிக்கும் முன்னே தன சுய ஜாதகத்தை சொல்லி முடித்து மறைந்தான் .... அவனுக்கு என்னை தெரியுமாம் எனக்கு அவனை தெரியாதாம்....
95 -ல் ஒரு ஜூன் முதல் வாரத்தில் தான் சந்திக்க நேர்ந்தது.... நடு நிலை பள்ளியிலிருந்து ... மேல்நிலை பள்ளிக்கு ...மாற்றம்
பெரிய பள்ளி...புது மனிதர்கள்... என ஒதுங்கியிருந்த நேரம் .... அம்மா , பள்ளி ...வீடு என ஒற்றை கோட்டில் பயணித்துக் கொண்டிருந்த சராசரி நாட்களில்..
நட்பும் அதன் வாசமும் அறியாத பொழுதுகளில் .... திடுப் திடுபென்ன ,,,,, அதிரடியாய் ... ஒரு அறிமுகம்.....

"சங்கரம்மா ... ஒண்ணும் கவலை படாதீங்க....நாப் பாத்துக்குறேன்.....". ரமேஷின் தைரியமான வார்த்தைகள்
நம்ம லக்ஷ்மி பையன்தான் ,,.,, அம்மாவுக்கு ஒரு ஆறுதல்... அவ்ளோ தூரம் தனியாஅனுப்பனுமேன்னு ..பயந்தேன் ...ஒரே தெரு.... ஒரே கிளாஸ்.. ..ஒன்னுமன்னா போயிட்டு பத்திரமா வாங்க...
ஒரே அலைவரிசை ................அன்று பேச ஆரம்பித்த்தது... அப்படி என்னதான் பேசுவாய்ங்களோ... கேட்காத ஆளே இல்லை..
என்னையும் என் திறமையும் அங்கீகரித்த , என் ரத்தம் சாராத முதல் ஜீவன்...உள்ளுணர்வு அங்கீகரித்த முதல் நண்பன் ........... ரமேஷ் ..............
.
இவனுக்கு என்ன தான் வேண்டுமாம் ..என .. பல தடவை எரிச்சல் அடைந்ததுண்டு... ஒரு colgate சிரிப்பை செயற்கையாக வைத்து கொண்டு எல்லாவற்றையும் மாற்றி விடுவான்...
"இங்க பாரு சங்கரு .. பாஸ்ட் பௌலிங் போடணும்னா , இந்த ரெண்டு விரலுகிடையில் பால வச்சிக்கணும... கொஞ்சம் front ல புடிச்சுகிட்ட dead பால்ல போய் போல்டாயிடும் ... "
"டேய் சங்கர் வர்றியா . சாரங்கா வீட்ல கேரம் ஆடலாம் ...."

"வேணாமுடா ரமேசு அம்மா திட்டுவாங்க...."
"டேய் அம்மான்னா திட்டதாண்டா செய்வாங்க... அப்புறம் எப்டிடா கேரம் கத்துகிறது.." "உங்கப்பாருக்கும் எங்கப்பாருக்கும் .. கேரம் போர்டுல போடுற பவுடர் வாங்கவே துப்பு கிடையாது... இதுல எங்க கேரம் போர்டு வாங்கி நம்ம கத்துக்கிட்டு ..... "
ரமேஷின் மிகபெரிய பலம் அவனுடைய இயல்பான நகைச்சுவை...
சரி வா .... அடுத்த வாரம் shuttle விளையாடலாம் ...என்றவனிடம் ... அப்ப்டின்னா என்றேன்....

ஆதி முதல் அந்தம் வரை shuttle - நுணுக்கங்களை கற்று கொடுத்தான்....
"away -ன்னு சொன்னா விட்டுடு .... நெட் கிட்ட காக் இறங்கும்போது close -ல போ...
சர்வீஸ் ரொம்ப முக்கியம் சங்கரு.... சர்வீஸ் வேஸ்ட் பண்ணினா மவனே அவ்ளோதான்..."
AGGRESSIVE என்றால் அது ரமேஷ்... போட்டி வாழ்க்கையில் ஒரு போராளி...
எந்த ஒரு விஷயத்தையும் , அதிரடி மூலமே நிரந்தர தீர்வுக்கு கொண்டு வர முடியும் என்பது ரமேஷின் வாதம்...
பரீட்சை என்றால்.... கோபு நாயக்கர் வீட்டில் செம்பருத்தி பூ பறித்து .. அதை தெரு எல்லை சாமியான ஆஞ்சனேயரிடம் வைத்து ,அவரையும் பரீட்சைக்கு கூட கூட்டி செல்வது..வழக்கம் .

பரீட்சை அட்டையில் ..... பெரிய துண்ணூறு பட்டை அடித்து ... கிளிப்பில் குங்குமம் தடவி.. ஒரு பக்தி பழமாக.... பரீட்சை ஹாலில் நுழைவது...
சங்கரு.... நீ போடுற செம்பருத்தி பூ ஆஞ்சநேயர் நெஞ்சில் இருக்கிற வெண்ணையில் உட்கார்ந்தா .... உனக்கு question easy -ஆ வரும் ,,,, நீ எனக்கு காண்பிக்கணும்... அதே மாதிரி நான் போடுற செம்பருத்தி பூ உட்கார்ந்தா question எனக்கு easy-ஆ வரும்... நான் உனக்கு காண்பிக்கிறேன்.... நல்ல deal தான்..
ஒரு தடவை கூட மிஸ் பண்ணாமல்...பூவை கரெக்ட்-ஆக ஆஞ்சநேயர் நெஞ்சில் உட்கார வைத்து விடுவான் ரமேஷ்... ஆனால் question என்னவோ எனக்குதான் easy -ஆ வரும்...
P .T Period -ல் விளையாடிய களைப்பில் , வீட்டுக்கு போவ எத்தனிக்கும் போது...

"சங்கரு உரப்பு மாங்காடா ."
" என்கிட்டே காசு இல்ல ரமேசு .."
" என்கிட்ட கா ரூவா இருக்குடா...சங்கரு "
ஒரு பீசு மாங்காவ வாங்கி என்னை பார்க்கும் ரமேஷ் ... நீ ரொம்ப சுத்தம் படிப்பியே என ... வெள்ளை சட்டையில் வைத்து சுருட்டி மடித்து ... வாயில் வைத்து கடித்து..... ஒரு பாதியை இந்தா என்பான்..
இதுக்கு நீ வாயிலே வச்சு கடிச்சிருக்கலாம் என நக்கலிப்பேன்.. , விளையாண்ட புழுதியில் அழுக்கான சட்டைய காண்பித்து..
ஒருநாள் shuttle விளையாட யாரும் கிடைக்காமல் ... ரமேசுடன் விளையாட வேண்டிய நிலை....

எதிர்பாரதவிதமாக ... ஸ்கோர்.. சம விகிதத்தில் செல்ல ஆரம்பிக்க.... எதிர பார்க்காத ரமேஷ் ரொம்ப nervous ஆகி போனான்...
ஒரு சர்ச்சைக்குரிய away -ல் சண்டை வர அவ்ளோ தான்... 30 ரூபாய்க்கு வாங்கிய அந்த பூஸ்ட் பேட் வளையும் அளவுக்கு அவனை அடித்து விட்டு...அழுது கொண்டே வீட்டுக்கு செல்ல ...
எதிர் பாராமல் appear ஆன ரமேஷ் அக்கா , "அய்யய்யோ சங்கரை , ரமேஷ் அடிச்சிட்டான்ம்மா ...சங்கர் அழுதுகிட்டே வீட்டுக்கு போறான் "
என ஒரு பிட்-ஐ கொளுத்தி போட..அவ்ளோ தான் ரமேஷ் அம்மா பிடித்து கொண்டார்.
( ரமேஷ் அம்மாவுக்கு சங்கர் என்றால் தனி பிரியம்... ஒரு பெரிய மனிதன் range -க்கு எல்லா குடும்ப கதையும் சொல்வார்... )
ரமேஷ்க்கு அர்ச்சனை மேல் அர்ச்சனை... "இப்ப போய் அவன கூட்டி வரல .... நீ வீட்டுக்குள்ளே வராத ... அந்த பையன போய் அடிசிருக்கியே ,,, நீ புள்ளயா நீ.." என ஏக வசனம்...
ஒரு பக்கம் பூஸ்ட் பேட் அடி... இன்னொரு பக்கம் திட்டு ... ரமேஷுக்கு ஒன்றுமே புரியவில்லை...
"நான் அடிக்கல .... அவன்தான் அடிச்சான்னு ... சொன்ன ... எவனும் நம்ப போறதில்ல,,, சரி போய் கூட்டியாறேன்..". என மனதுக்குள் முணுமுணுத்து கொண்டே என் வீடு வந்தான் ...
எவ்ளோ சமாதான படுத்தியும் ... நான் கேட்பதாக இல்லை.." சரிடா ... அது away தாண்டா .... வா.... இப்ப நான் உன்னைய கூட்டி போகல ... எங்க அம்மா அடிக்குமுடா..".. வேலைக்கு ஆக வில்லை ..திரும்பி போய் விட்டான்...
(உண்மை என்னவென்றால் ... இந்த பதினாறு வருடத்தில் ரமேஷ் என்னை அதட்டி கூட பேசியது கிடையாது... )
அடுத்த நான்கு நாட்களில் .. சார் போஸ்ட் !! என அண்ணன் ஒரு Greeting கொண்டு வந்து கொடுத்தான் ,,,உள்ளே நட்பு வானம் காற்று ,,, தண்ணீர் என ஏகத்துக்கும் எழுதியிருந்தான் ரமேஷ்.... அதனை தொடர்ந்து வந்த அனைத்து கார்டு-லும் அழகான படம் செலக்ட் செய்ய பட்ட ரசனையும் நல்ல கவிதையும் இருந்தது... பள்ளி மாணவன்லிருந்து இலக்கியத்தில் நுழைந்திருந்தான்... சில விஷயங்கள் இயல்பாகவே அமையும் போல....
நான் டிப்ளோமாவும் , அவன் பிளஸ் ஒண்ணும் சேர்ந்து விட, வேறு வேறு பாதையில் பயணித்த போதும்... எப்போதாவது பார்த்து கொள்வதுண்டு..

திடீரென ஒருநாள் எதிர்பட்ட பள்ளித்தோழி மேனகா , டேய் ரமேஷ் கதை எழுதி இருக்காண்டா ,,, உன் பேர்லாம் இருக்கு ..என போகிற போக்கில் ஒரு பிட்டை போட்டுவிட்டு போக...
தம்பிக்கோட்டை முழு ஸ்கிரிப்ட்-யையே படித்து விட்ட எனக்கு ..... எவ்ளோ முயற்சித்தும் ... அவனுடய முதல் கதையை இன்று வரை படிக்க முடியவில்லை.... என்னை தவிர மற்ற எல்லாரையும் அவன் கெஞ்சி
படிக்க வைத்தாக கேள்விபட்டேன்...
வாழ்க்கை ஒருவழி பாதை.... அது ஒரு ரயில் பயணம் மாதிரி ... நம் ஊர் வரும் போது இறங்கி விட வேண்டும் என நண்பர்களை பெற்று இழக்கும் போது , வெட்டி பில்ட் அப் கொடுக்கும் எனக்கு ... ரமேஷுடனான இத்தனை வருட நட்பு பயணம் ஒரு அதியசம் தான்... ஆச்சர்யமும் கூட.... இதோ போன வாரம் கால் பண்ணும போது கூட அதே பதினாறு வருட குரல் , வயதாகாமல் சொல்கிறது " ஹேய்ய்ய்ய் சங்கரே ......... . "...
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ --------
இந்த வருட ஆரம்பத்தில் வாழ்த்து சொல்ல , அவனுடன் பேசிய பொழுது ... கிட்ட தட்ட மூன்று மணி நேரம் பேசி முடித்தோம் .. நான் கடந்த காலத்தில் இவ்ளோ சீரியஸ் ஆனவனா! என எனக்கே என்னை ஞபாக படுத்தினான்...ஒரு 1000 லிட்டர் energy drink குடித்த மாதிரி இருந்தது... அவனுடன் ஆன உரையாடல்....
தம்பிக்கோட்டை முழு ஸ்கிரிப்ட்-யையே படித்து விட்ட எனக்கு ..... எவ்ளோ முயற்சித்தும் ... அவனுடய முதல் கதையை இன்று வரை படிக்க முடியவில்லை.... என்னை தவிர மற்ற எல்லாரையும் அவன் கெஞ்சி
வாழ்க்கை ஒருவழி பாதை.... அது ஒரு ரயில் பயணம் மாதிரி ... நம் ஊர் வரும் போது இறங்கி விட வேண்டும் என நண்பர்களை பெற்று இழக்கும் போது , வெட்டி பில்ட் அப் கொடுக்கும் எனக்கு ... ரமேஷுடனான இத்தனை வருட நட்பு பயணம் ஒரு அதியசம் தான்... ஆச்சர்யமும் கூட.... இதோ போன வாரம் கால் பண்ணும போது கூட அதே பதினாறு வருட குரல் , வயதாகாமல் சொல்கிறது " ஹேய்ய்ய்ய் சங்கரே ......... . "...
------------------------------
இந்த வருட ஆரம்பத்தில் வாழ்த்து சொல்ல , அவனுடன் பேசிய பொழுது ... கிட்ட தட்ட மூன்று மணி நேரம் பேசி முடித்தோம் .. நான் கடந்த காலத்தில் இவ்ளோ சீரியஸ் ஆனவனா! என எனக்கே என்னை ஞபாக படுத்தினான்...ஒரு 1000 லிட்டர் energy drink குடித்த மாதிரி இருந்தது... அவனுடன் ஆன உரையாடல்....
நல்ல பெற்றோர், ஆசிரியர், குரு ..சகோதரன்... காதலி ,மனைவி....இவர்களை விட கடவுளால் ஆசிர்வதிக்க பட்டவன் ,,,, நல்ல நண்பர்கள் கிடைக்க பெற்றவனே..... அந்த வகையில்.... நானும்... ஆசிர்வதிக்க பட்டிருக்கிறேன் ... என அந்த உரையாடல் உணர்த்தியது...
------------------------------
No comments:
Post a Comment